காஞ்சிபுரத்தில் 384 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

79பார்த்தது
காஞ்சிபுரத்தில் 384 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு நிறுவனமான தமிழ்நாடு சரிகை ஆலையில் கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் ரூ. 1. 50 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட புதிய அலுவலக வளாகம் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் புதிய சேமிப்பு கிடங்கினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, ரூ. 1. 15 கோடி மதிப்பில் தமிழ்நாடு சரிகை ஆலை சுற்றுச்சுவர், தொழிலாளர்களுக்கு சிற்றுண்டி சாலை, இரு சக்கர வாகன நிறுத்தம் கட்டிடம் மற்றும் ஓய்வு அறைக்கான அடி கல்லினையும் நாட்டினார்கள். கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ. 56. 89 இலட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு சரிகை ஆலையில் சரிகை கொள்முதல் செய்த கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு மார்க் 1- க்கு ரூ. 200/-வீதம் ஊக்கத் தொகையும் ஆக 383 பயனாளிகளுக்கு ரூ. 378. 87 கோடி மதிப்பிலான கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி வழங்கினார்.
இவ்விழாவில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் ஆனந்தகுமார், கைத்தறி துறை ஆணையர் விவேகானந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி. வி. எம். பி. எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி