குரோம்பேட்டை ரயில் நிலையத்தை தினசரி, ஏராளமான பயணியர் பயன்படுத்துகின்றனர்.
இந்த ரயில் நிலையத்தில், பயணியரின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா வசதி இல்லை.
அதனால், 'சிசிடிவி' கேமரா பொருத்த, குரோம்பேட்டை ரயில் பயணியர் சங்கம் சார்பில் நேற்று, கோரிக்கை முழக்க
போராட்டம் நடத்தப்பட்டது.
அதேபோல், குரோம்பேட்டை, ராஜேந்திர பிரசாத், ராதா நகர், ஸ்டேஷன், வைத்தியலிங்கம், தர்கா சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அகலப்படுத்த வேண்டும் என, தாம்பரம் மாநகராட்சி மண்டலம், 2, 3 குடியிருப்போர் நலச்சங்க இணைப்பு மையம் சார்பில், குரோம்பேட்டையில் நேற்று முன்தினம்
ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், அனைத்து மழைநீர் கால்வாய்களையும் மழைக்கு முன் துார்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பப்பட்டது.