மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரர் திருக்கோயிலில் திருத்தேரோட்டம்

60பார்த்தது
மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி திருத்தேரோட்டம்


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரின் கடப்பேரி நகரில் உள்ள தொண்டை நாட்டு சிவஸ்தலங்களில் ஒன்றானதும், நான்கு பைரவர்களை கொண்ட சிறப்பு ஸ்தலமாகவும், சரும நோய்களைப் போக்கக்கூடிய கீதம் கொண்ட தலமாகவும் விளங்கும் அருள்மிகு மீனாட்சிய அம்பாள் உடனுறை வெண் காட்டீஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளன்று திருத்தேர் திருவிழா நடைபெற்றது.

விழாவையொட்டி, கோயிலின் எதிரே இருந்த தேரில் மீனாட்சி அம்பாளும் வெண்மையான காட்டீஸ்வரர் எழுந்தருளி காட்சியளித்தனர்.


அதன் பின்னர், நமசிவாய, நமசிவாய என பக்தர்கள் கோஷங்கள் முழங்க தேரின் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

சிறிய தேரில் மீனாட்சி அம்பாள் எழுந்தருளி காட்சியளித்தார். அம்பாள் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

அதனைத் தொடர்ந்து தேர் நகர வீதிகளிலும் வளம் வந்து தேர் நிலையை அடைந்தது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி