நள்ளிரவு நேரத்திலும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குவிந்த பயணிகள்
சாரை சாரையாக வந்து பேருந்துகளில் ஏறி சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்
பொங்கல் பண்டிகையை கொண்டாட தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் மக்களுக்காக தமிழக அரசு சார்பில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து ஏராளமான ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மாலை முதலே அதிக அளவிலான பொதுமக்கள் வருகை தந்து அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்தனர்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நள்ளிரவு நேரத்திலும் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதுடன் சாரை சாரையாக பேருந்து நிலையத்திற்கு வந்தனர்.
முன்பதிவு இல்லாமல் செல்லக்கூடிய பேருந்துகள் கால தாமதமாக வந்ததால் பயணிகள் பேருந்து நிலைய வளாகத்தில் காத்திருந்து செல்ல வேண்டிய ஒரு சூழல் உருவாகி உள்ளது
மேலும் பயணிகளின் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.