சுற்றி தெரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

54பார்த்தது
திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் சுற்றி தெரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி. கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம். நாள்தோறும் அரங்கேறும் விபத்துக்கள் குறைய நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி நிர்வாகம்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட திருப்போரூர் ரவுண்டானா, அம்பேத்கர் சிலை, முருகன் கோவில், கண்ணகப்பட்டு, காலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட வளர்ப்பு மாடுகள் சாலையில் சுற்றி திரிகின்றன.

இதுகுறித்து திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

சாலையில் சுற்றித் திரியும் மாதுகளால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.

சில நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு பல உயிர் வலியும் ஏற்படுகிறது, பலர் காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
எனவே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் கோரிக்கை வைத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி