குன்றத்தூரில் படுமோசமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

58பார்த்தது
குன்றத்தூரில் படுமோசமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. 

குன்றத்தூர் அருகே சிறுகளத்தூரில், இந்த சாலை பல இடங்களில் சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. சிறிதளவு மழை பெய்தாலே, சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Job Suitcase

Jobs near you