பராமரிப்பு இன்றி மின் கம்பங்கள்

67பார்த்தது
பராமரிப்பு இன்றி மின் கம்பங்கள்
சுங்குவார்சத்திரம் அடுத்து, ராமானுஜபுரம் --- மேல்மதுரமங்கலம் பிரதான சாலை வழியே, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், மின்கம்பங்களில் உள்ள மின்விளக்கு முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

இதனால், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், போதிய வெளிச்சம் இன்றி, மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும், மின்கம்பங்களில், கட்டை மற்றும் குச்சிகளில் மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளன. இவை அவ்வப்போது கழன்று விழுந்து வருகின்றன.

அதே போல, சிவன்கூடல் பகுதியில் சில மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இதனால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே, மின்கம்பத்தை சரி செய்து, கட்டையை அகற்றி, இரும்பு பைப்பில் மின் விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி