சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலை வழியே ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இந்த சாலை நடுவே உள்ள மீடியன் பகுதியில், தி. மு. க. , வைச் சேர்ந்தோர் சுவர் விளம்பரங்களை அதிக அளவில் வரைந்து உள்ளனர்.
தி. மு. க. , வினர் சுவர் விளம்பரம் வரைவதை பார்த்து அ. தி. மு. க. , மற்றும் மற்ற கட்சியினரும் சுவர் விளம்பரங்களை நெடுஞ்சாலை தடுப்புகளில் வரைந்து வருகின்றனர்.
இதனால், வண்டலுார்-- - வாலாஜாபாத் நெடுஞ்சாலை, சென்னை-- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பில் சுவர் விளம்பரங்களாக காணப்படுகின்றன.
இவை, அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்ப்பதால், விபத்து ஏற்படும் ஆபத்தும் உள்ளது.
நெடுஞ்சாலை தடுப்பில் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களை அழிக்க வேண்டும்.
அதன்பின் மீண்டும் சுவர் விளம்பரம் வரைபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.