விபத்தில் படுகாயமடைந்து மூளை சாவடைந்த நரசங்குப்பத்தை சார்ந்த கல்லுரி மாணவர் விஜயகுமார் உடல் உறுப்பு தானம் - சப் கலெக்டர் நாராயண சர்மா அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நெய்குப்பி ஊராட்சி நரசங்குப்பம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் யுவநேசன் பில்டிங் கரண்ட்ராக்டர். இவருடைய மகன் விஜயகுமார் வயது 21 கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி மாணவர் கடந்த சனிக்கிழமை கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து நரசங்குப்பத்திலுள்ள தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தவர் மீது லாரி மோதியது இதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மியாட் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மூளை சாவடைந்தார். அவரது 7 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டு துணை ஆட்சியர் நாராயணசர்மா அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அரசு சார்பில் மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார் நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியர் சத்யா, ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன் துணை தலைவர் என் என் கதிரவன் வார்டு உறுப்பினர் வேலு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.