மேல்மருவத்தூரில் போக்சோ வழக்கில் நான்கு மாணவர்கள்
கைது செய்து சிறையில் அடைப்பு.
செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் காவல் எல்லைக்குட்பட்ட தச்சூர் கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது.
அங்கு, தச்சூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவியுடன், பத்தாம் வகுப்பு
கல்வி பயிலும், தச்சூர் பகுதியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மற்றும் திருக்கழுக்குன்றம் பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி பயிலும்
ஒரு மாணவர் உட்பட நான்கு பேர், கடந்த மாதம், பள்ளி மாணவியிடம், பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.
அதனை வீடியோ பதிவு செய்து
மற்ற பள்ளி நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த வீடியோ குறித்து, சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு
தெரிய வந்துள்ளது.
இதனால், நேற்று மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த
மேல்மருவத்தூர் அனைத்து
மகளிர் போலீசார், சம்பந்தப்பட்ட மாணவர்களை கைது செய்து, செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி
இளஞ்சிறார் சிறையில் அடைத்தனர்.