காஞ்சிபுரம் மாவட்டம்
ஸ்ரீபெரும்புதுார் - சிங்பெருமாள் கோவில் சாலை 25 கி. மீ. , துாரம் உடையது. இந்த சாலையில் ஒரகடம், வல்லம் - வடகால், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
தவிர, சென்னக்குப்பம், மாத்துார், ஒரகடம், வல்லம், போந்துார், ஆப்பூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், இப்பகுதிகளில் மாடுகளை வைத்திருப்பவர்கள், தங்களின் மாடுகளை கொட்டகையில் வைத்த பராமரிக்காமல், மேட்சலுக்கு சாலையில் விடுகின்றனர்.
அவை, கூட்டம், கூட்டமாக சாலையில் திரிகிறன. மேலும், ஸ்ரீபெரும்புதுார் சிங்கபெருமாள் கோவில் சாலை மையத்தடுப்பில் வளர்ந்தள்ள புற்களை மேய்கிறது.
அப்போது, திடீரென அவை சாலையில் குறுக்கே ஓடுவதால், வேகமான வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர் கதையாக உள்ளது. எனவே, சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்னர்.