காஞ்சிபுரம் குறுவட்டத்தை இரண்டாக பிரிக்க எதிர்பார்ப்பு

82பார்த்தது
காஞ்சிபுரம் குறுவட்டத்தை இரண்டாக பிரிக்க எதிர்பார்ப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என, ஐந்து தாலுகாக்கள் உள்ளன. இதில், வருவாய் துறை சம்பந்தமாக, பொதுமக்களிடம் அதிகளவில் கோரிக்கை மனுக்கள் பெறும் தாலுகாவாக காஞ்சிபுரம் உள்ளது.

இங்கு, பரந்துார், சிட்டியம்பாக்கம், காஞ்சிபுரம், திருப்புட்குழி, கோவிந்தவாடி, சிறுகாவேரிப்பாக்கம் என, ஆறு குறு வட்டங்கள் உள்ளன.

இதில், அதிகபடியான வருவாய் துறை பணிகள் மேற்கொள்ளும் குறுவட்டமாக காஞ்சிபுரம் உள்ளது.

காஞ்சிபுரம் குறுவட்டத்தில் வருமானம், இருப்பிடம், ஜாதி, வாரிசு, விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண் சான்று, முதல் பட்டதாரி சான்று என, அனைத்து வகையான சான்றுகளும், மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் வருவதால், வருவாய் ஆய்வாளருக்கு பணிச்சுமை ஏற்படுவதாக துறை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் குறுவட்டத்தின் கீழ், செவிலிமேடு, காஞ்சிபுரம், சின்ன காஞ்சிபுரம், தேனம்பாக்கம், அரப்பணஞ்சேரி என, 10 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் உள்ளனர்.

இந்த, 10 கிராம நிர்வாக அலுவலருக்கு வரக்கூடிய வருவாய் துறை சான்றிதழ்களை, ஒரே ஒரு வருவாய் ஆய்வாளர் தாசில்தாருக்கு பரிந்துரை செய்ய போதிய அவகாசம் கிடைப்பதில்லை என்கின்றனர். மாதந்தோறும், சராசரியாக 3, 000 பேர், பல வகையான சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி