காஞ்சி தெற்கு மாவட்டம் இலத்தூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் செய்யூரில் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் எம். எஸ். பாபு தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க. செல்வம், தலைமைக்காக பேச்சாளர் சூரியமகள்ஆண்டாள் பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல்மாலிக், மாவட்ட கவுன்சிலர் ஜெயலட்சுமிமகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணிதணிகாசலம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.