செங்கல்பட்டு மாவட்டம்
திருப்போரூர் வட்டத்தில் இன்றைய தினம் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமின் ஒரு பகுதியாக பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார் தொடர்ந்து திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார் அதனை தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே உள்ள பொது கழிவறையினை ஆய்வு செய்தவர் கழிவறையை சுழற்சி முறையில் சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார் அதனை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் உள்ள இருசக்கர வாகனங்களை அகற்றுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் உள்ள கழிவுகளை அகற்றவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர் மாணவியர் தங்கும் விடுதியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் மாணவியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க விடுதி பராமரிப்பாளருக்கு உத்தரவிட்டார் குறிப்பாக கொசுவலை மற்றும் சுத்தமான குடிநீர் அமைக்க உத்தரவிட்டார் மாணவியர் ஓய்வு நேரத்தில் படிக்க டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான புத்தகங்கள் வேண்டும் என கேட்டுக் கொண்டதன் பேரில் டிஎன்பிஎஸ்சி சார்ந்த அனைத்து புத்தகங்களையும் வாங்கிக் கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் அடுத்ததாக மாணவியர் அருந்தும் உணவினை ஆய்வு செய்தவர்.