வண்டலுார் - -வாலாஜாபாத் சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் படப்பை பஜார் பகுதியில் ஏற்படும்
போக்குவரத்து நெரிசலை குறைக்க 26. 64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கியது. மேம்பாலம் கட்டுமான பணிக்காக சாலையின் நடுவே தடுப்புக்கள் அமைக்கப்பட்டன.
இதனால், படப்பை பஜார் பகுதியில் ஒருபுறம் சாலையில் இருந்து, மறுபுறம் சாலைக்கு செல்ல ஒரு கி. மீ. , துாரம் வரை வாகனங்கள் சுற்றிக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில், ஒரு ஆண்டுகளாக பாலம் கட்டுமான பணிகள் மந்த கதியில் நடக்கின்றன. மேம்பாலம் கட்டுமான பணியால் படப்பையில்
போக்குவரத்து நெரிசல் வழக்கத்தைவிட இரு மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால், வியாபாரிகள், பொதுமக்கள் வேதனைகுள்ளாகியுள்ளனர். மேம்பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.