வனப்பகுதியில் 835 சூரிய ஒளி விளக்கு பொருத்த முடிவு

55பார்த்தது
வனப்பகுதியில் 835 சூரிய ஒளி விளக்கு பொருத்த முடிவு
மதுராந்தகம் வனச்சரக அலுவலகத்தின் கீழ், மதுராந்தகம், செய்யூர், உத்திரமேரூர் தாலுகாக்களில், 4, 872 ஹெக்டேர் நிலப்பரப்பில், இலையுதிர் காப்பு காடுகள் உள்ளன. சமூக காடுகள் 3, 000 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளன.

கோழியாளம், தீட்டாளம், பெருங்கோழி, காட்டுக்கூடலுார், காட்டுக்கரணை, தோட்டச்சேரி, கொளத்தனுார், எடமச்சி, ராமாபுரம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், இந்த காப்புக் காடுகள் உள்ளன.

இக்காடுகளில், 2, 000க்கும் அதிகமான மான்கள், 1, 000க்கும்அதிகமான மயில்கள், காட்டுப்பன்றி, முயல், நரி, குள்ளநரி, உடும்பு, குரங்கு உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்கின்றன.


தவிப்பு


காப்புக் காடுகளை ஒட்டியுள்ள விவசாய விளை நிலங்களில், நெல், கரும்பு, வேர்க்கடலை, உளுந்து, மரவள்ளி கிழங்கு, கேழ்வரகு, பருத்தி, தர்பூசணி போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

தண்ணீர், உணவுத் தேவைக்காக, காப்புக் காடுகளில் இருந்து வெளியேறும் மான்கள், காட்டுப்பன்றிகள் போன்றவை, பயிர்களை நாசம் செய்கின்றன.

அதனால், பயிர்கள் அழிந்து விவசாயிகளுக்கு பொருளாதார பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தொடர்புடைய செய்தி