நெடுஞ்சாலையில் வரிசை கட்டி நிற்கும் கன்டெய்னர்கள்

3051பார்த்தது
நெடுஞ்சாலையில் வரிசை கட்டி நிற்கும் கன்டெய்னர்கள்
இருங்காட்டுக்கோட்டையில், தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து அணிவகுத்து நிற்கும் கன்டெய்னர் லாரிகளால் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. சென்னை-- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் லட்சக்கணக்கில் வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையோரம் ஸ்ரீபெரும்புதுார் அருகே இருங்காட்டுக்கோட்டையில் சிப்காட் தொழிற்பூங்கா உள்ளது. இங்கு கார், அதன் உதிரி பாகங்களை தயாரிக்கும் 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இங்கு உற்பத்திக்கு தேவையான பொருட்களை ஏற்றிக் கொண்டும், உற்பத்தி செய்யப்பட்ட கார்களை ஏற்றி செல்லவும் ஏராளமான கன்டெய்னர் லாரிகள் வருகின்றன. இந்த லாரிகள் நிற்பதற்கு இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில், கனரக வாகன நிறுத்தம் முனையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு கன்டெய்னர் லாரிகள் நிறுத்தாமல், தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படுவதால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் கன்டெய்னர் லாரி ஓட்டுனர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி