காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் ஊராட்சியில், செட்டியார்பேட்டை- எம். ஜி. ஆர். , நகர் துணை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இறந்தவர்களை புதைக்கவும், எரிக்கவும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, காரை கிராமத்திற்கு செல்லும் பகுதியில் சுடுகாடு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த சுடுகாட்டிற்கு செல்வதற்கு, போதிய பாதை மற்றும் சுற்றுச்சுவர் வசதிகள் இல்லை. இதனால், இறந்தவர்களை எடுத்து செல்வதற்கு சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது.
எனவே, செட்டியார்பேட்டை- எம். ஜி. ஆர். , நகர் சுடுகாடிற்கு பாதை மற்றும் சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சம்பந்தப்பட்ட சுடுகாட்டை ஆய்வு செய்துவிட்டு, ஊராட்சி வளர்ச்சி பணி பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.