50 சவரன் நகையுடன் லாக்கரை துாக்கி சென்ற கொள்ளையர்

69பார்த்தது
50 சவரன் நகையுடன் லாக்கரை துாக்கி சென்ற கொள்ளையர்
குரோம்பேட்டையை அடுத்த சிட்லபாக்கத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ், 67. அவரது மனைவி ஹேமலதா. மகன் ஆதித்யா. அனைவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர்.

ரங்கராஜன் தந்தையின் நுாறாவது பிறந்த நாளை கொண்டாட, சில நாட்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் மயிலாப்பூருக்கு சென்றனர்.

அடுத்த நாள், ரங்கராஜன் வீட்டின் எதிரில் இருப்பவர்கள், அவரை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு, வீட்டின் கதவு திறந்திருப்பதாக தகவல் தெரிவித்தனர். ரங்கராஜன் வந்து பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவில் இருந்து துணிகள் கலைக்கப்பட்டு கிடந்தன. வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தன.

மேலும், வீட்டில் இருந்த சிறிய லாக்கரை மர்ம நபர்கள் அப்படியே துாக்கிச் சென்றதும் தெரியவந்தது. அந்த லாக்கரில் 50 சவரன் நகை, 10 கிலோ வெள்ளி பொருட்கள் இருந்தன. பழைய லாக்கர் என்பதால், அதன் பூட்டை உடைக்க முடியாமல், அப்படியே துாக்கிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து, சிட்லப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ரங்கராஜன் வீட்டின் அருகே கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி