தாம்பரத்தில் தடையின்றி குடிநீர் வழங்க 4 டேங்கர் லாரிகள்

64பார்த்தது
தாம்பரத்தில் தடையின்றி குடிநீர் வழங்க 4 டேங்கர் லாரிகள்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில், 5 மண்டலங்களிலும், இணைப்பு இல்லாத பகுதி மற்றும் அவசரத்திற்கு குடிநீர் வழங்க ஏதுவாக, 10 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட நான்கு டேங்கர் லாரிகள், பயன்பாட்டிற்கு வந்துள்ளன. தாம்பரம் மாநகராட்சி பகுதிகளுக்கு, வாலாஜாபாத்தை அடுத்த பழைய சீவரம், மேலச்சேரி, வில்லியம்பாக்கம் பகுதிகளில் பாலாற்று படுகையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, அங்கிருந்து குழாய் வாயிலாக குடிநீர் கொண்டு வரப்பட்டு, வினியோகிக்கப்படுகிறது. 

பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், சிட்லப்பாக்கம், திருநீர்மலை பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மெட்ரோ வாயிலாக குடிநீர் பெறப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. மேலும் புதியதாக உருவான இணைப்பு இல்லாத பகுதிகள், குழாய் உடைப்பு ஏற்படும் பகுதிகளில், லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சொந்தமாக லாரிகள் இல்லாததால், வாடகை லாரி வாயிலாக குடிநீர் வினியோகம் செய்கின்றனர். 

இதற்காக, ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவாகிறது. இதை தடுக்கும் பொருட்டு, மாநகராட்சி லாரிகள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, 10 கோடி ரூபாய் செலவில், நான்கு டேங்கர் லாரிகள் வாங்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி