ஊராட்சி செயலர் வீட்டில் 2 சவரன் நகை திருட்டு

580பார்த்தது
ஊராட்சி செயலர் வீட்டில் 2 சவரன் நகை திருட்டு
பவுஞ்சூர் அருகே நீலமங்கலம் கிராமம், பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 53. லத்துார் ஊராட்சியில் செயலராக பணியாற்றி வருகிறார். நேற்று, வழக்கம் போல வேலைக்குச் சென்றுள்ளார்.

நேற்று காலை 9: 00 மணிக்கு அவரின் மனைவி அஞ்சலை, 47, பேரக் குழந்தைகளை வீட்டில் டி. வி. , பார்க்க வைத்து விட்டு. மேய்ச்சலுக்காக மாடுகளை வயல்வெளிக்கு ஓட்டிச்சென்றுள்ளார்.

மாடுகளை வயலில் கட்டிவிட்டு, 10: 30 மணிக்கு வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பீரோவில் இருந்த 2 சவரன் செயின் மற்றும் அரை சவரன் தங்க டாலர் காணாமல் போயிருந்தன. இதுகுறித்து, அஞ்சலை அளித்த புகாரின்படி அணைக்கட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். "

டேக்ஸ் :