திருக்கழுக்குன்றம் அருகே 120கிலோ குட்கா பறிமுதல்.. 4 பேர் கைது

68பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரப்பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று (ஜனவரி 3) இரவு எம்ஜிஆர் சிலை அருகே போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த துரை (எ) சேர்மதுரை, என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். 

இதில், சுமார் 120 கிலோ குட்கா கடத்துவதற்காக அப்பகுதியில் நின்றிருந்தது தெரிந்தது. இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக பாண்டூர் மற்றும் திருக்கழுக்குன்றம் பகுதிகளை சேர்ந்த ராஜலிங்கம், செந்தில்குமார், ஜெயக்குமார் ஆகியோரை கைது செய்த போலீஸார், 120 கிலோ குட்காவை பறிமுதல் செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி