சோழிங்கநல்லூர் - Sozhinganallur

காஞ்சி: கரை ஒதுங்கிய இரண்டு உடல்கள்; பரபரப்பு

சென்னை அண்ணாநகர் (மேற்கு), கம்பர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கிரீஷ்கேசவ் இவர் முகப்புறப் பகுதியில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் பி.ஏ. காம் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ரிஸ்வான், கறிக்கடை வைத்துள்ளார். இவரது மகன் ரியாஸ் இவர் கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு, திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில் பகுதி நேர சமையல் கலைஞராகப் பணிபுரிந்து வருகிறார். நண்பர்களான இருவரும் இதே பகுதியைச் சேர்ந்த தங்கள் சக நண்பர்கள் ரக்ஷத், ஆகாஷ், இளம்பெண் ஆர்யா உள்ளிட்ட 5 பேருடன் மாமல்லபுரம் சுற்றுலா வந்துள்ளனர்.  நண்பர்கள் 5 பேரும் மாமல்லபுரம் மீனவர் பகுதிக்கு வந்து அங்குள்ள கடலில் குளித்துள்ளனர். கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் ராட்சத அலையில் சிக்கி கிரீஷ், ரியாஸ் இருவரை ராட்சத அலை நடுக்கடலுக்கு இழுத்துச் சென்று மாயமானார்கள். கடலோர காவல்படை வீரர்கள் மீனவர்கள் உதவியுடன் 10 கி.மீ. தூரம் வரை படகில் ஆழ்கடலுக்குச் சென்று மாயமான கிரீஷ், ரியாஸ் இருவரின் உடலைத் தேடினர். இன்னிலையில் கடலில் நீரோட்டம் மாறி காற்றில் அடித்துச் செல்லப்பட்ட இவர்களது உடல்கள் அழுகிய நிலையில் கரை ஒதுங்கின. அதாவது மாமல்லபுரம் அருகே உள்ள வெண்புருஷம் கடற்கரையில் ரியாஸ் உடலும், உய்யாலிகுப்பம் கடற்கரையில் கிரீஷ்கேசவ் உடலும் கரை ஒதுங்கியது. இருவரது உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా