குன்றத்தூரில் தந்தை இறந்த சோகத்தில் மகன் தற்கொலை
துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர், ராஜேந்திரன். இவரது மகன் மாடசாமி, (23). குன்றத்துார் அருகே சோமங்கலம் அடுத்த புதுப்பேடு கிராமத்தில் உள்ள பழைய இரும்பு கடையில் தங்கி, மாடசாமி வேலை செய்து வந்தார். கடந்த மாதம் விஜயதசமிக்கு சொந்த ஊரான துாத்துக்குடிக்கு சென்றார். அப்போது, உடல் நலக்குறைவால் ராஜேந்திரன் இறந்தார். கடந்த 29ம் தேதி, மீண்டும் புதுப்பேடு பகுதிக்கு வந்து, பழைய இரும்பு கடையில் வேலை செய்த மாடசாமி, தந்தை இறந்த சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவர் தங்கி இருந்த அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.