அரிவாளை காட்டி மிரட்டி ரூ. 15, 000 துணிகள் அபேஸ்

79பார்த்தது
அரிவாளை காட்டி மிரட்டி ரூ. 15, 000 துணிகள் அபேஸ்
படப்பை அருகே சாலமங்கலத்தில் தனியார் துணிக்கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று முன்தினம் முக கவசம் அணிந்து சென்ற மர்ம நபர்கள் மூன்று பேர், 15, 000 ரூபாய் மதிப்பில் துணிகளை வாங்கியுள்ளனர்.

கடை ஊழியர் பணம் கேட்டபோது, அவர்களில் ஒருவர் தன் இடுப்பில் வைத்திருந்த அரிவாளை வெளியே எடுத்துகாட்டி, ஊழியரை மிரட்டி பணம் கொடுக்காமல் தப்பினர்.

இதுகுறித்து, கடையின் உரிமையாளர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் 'சிசிடிவி' காட்சிகளை வைத்து, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி