அலையில் சிக்கி வாலிபர் பலி

169பார்த்தது
அலையில் சிக்கி வாலிபர் பலி
சென்னை, நந்தனம் பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில் ஷெரீப், 22. இவர், உறவினர்களுடன் நேற்று கோவளம் கடலில் குளித்தபோது, இஸ்மாயில் ஷெரீப் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று மீட்டனர்.

மயங்கிய நிலையில் இருந்த இஸ்மாயில் ஷெரீபை, திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், இஸ்மாயில் ஷெரீப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கேளம்பாக்கம் போலீசார், இஸ்மாயில் ஷெரீப்பின் உடலை கைப்பற்றி, உடல் கூறாய்வுக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி