வெட்டுவாங்கேணி 194வது வார்டு பாண்டியன் நகரில் மீன் சந்தை அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில் மேற்கூரை கான்கிரீட் தளம் இன்றி சிமெண்ட் சீட் போடப்பட்டுள்ளது. இதன் மேற்கூரை பழுதடைந்த நிலையிலும் தண்ணீர் வசதி இன்றியும் கழிப்பிடம் இல்லாமலும் உள்ளது. எனவே குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி உடனடியாக அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தர வேண்டும் என்றும் அங்கன்வாடி மையத்தில் சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.