திருக்கழுக்குன்றத்தில் பல நூற்றாண்டுகளைக் கடந்த பழமை வாய்ந்த லட்சுமி தீர்த்த குளம் ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியினை திருக்கழுக்குன்ற பேரூராட்சித் தலைவர் யுவராஜ் துவக்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவிலின் தாழ்கோவில் அருகே பல நூற்றாண்டுகள் கடந்த லட்சுமி தீர்த்த குளம் உள்ளது. பழமை வாய்ந்த குளத்தைச் சுற்றி முற்செடிகள் படர்ந்து புதர்கள் மண்டியிருப்பதால் குளத்தைச் சீரமைக்க உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்பில் குளத்தைச் சீரமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, சீரமைக்கும் பணியினை திருக்கழுக்குன்றம் பேரூராட்சித் தலைவர் யுவராஜ் துவக்கி வைத்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர் சத்தியமூர்த்தி உட்பட திமுக நிர்வாகிகள் சரவணன், செங்குட்டுவன், இளங்கோ அகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.