மாமல்லபுரத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுக இளைஞரணி செயலாளர் மோகன் குமார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே காஞ்சி வடக்கு மாவட்ட மாமல்லபுரம் பேரூராட்சி திமுக இளைஞரணி சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை தொடர்ந்து நலத்திட்ட உதவிகளுடன் மாபெரும் பொதுக்கூட்டம் நகர இளைஞரணி அமைப்பாளரும், பேரூராட்சி கவுன்சிலருமான மோகன்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் ஆரணி மாலா மற்றும் மாவட்ட பொருளாளர் விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர் அதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் தினமான இன்று கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கியும் நலத்திட்ட உதவிகளாக தையல் இயந்திரம் 15 பேருக்கும் சேலை 1000 த்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார் மாவட்ட கவுன்சிலர் ஆர் கே ரமேஷ் திமுக நிர்வாகிகள் அருண்குமார் உட்பட மாவட்ட ஒன்றிய பேரூராட்சி நிர்வாகிகள் இளைஞரணி பொறுப்பாளர்கள் என பலர் உடனிருந்தனர்.