இரவு நேரத்தில் மின் தடை கூடுவாஞ்சேரியில் பாதிப்பு

81பார்த்தது
இரவு நேரத்தில் மின் தடை கூடுவாஞ்சேரியில் பாதிப்பு
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார், தங்கப்பாபுரம், தர்காஸ், காயரம்பேடு, குமிழி, கீரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், சில நாட்களாக, இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத தொடர் மின் தடை ஏற்படுகிறது.

இதனால், இப்பகுதிவாசிகள் இரவு நேரத்தில் துாக்கமின்றி தவிக்கின்றனர்.

இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

பெருமாட்டுநல்லுார், காயரம்பேடு, குமிழி உள்ளிட்ட ஊராட்சிகளின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில், இரவு நேரங்களில் தொடர்ந்து தொடர் மின் தடை ஏற்படுகிறது.

இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, துாக்கமின்றி தவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, எங்கள் பகுதிக்கு சீரான மின் வினியோகம் கிடைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்புடைய செய்தி