மதுரமங்கலம் அடுத்த, ஒண்டிக்குடிசை கிராமத்தில் இருந்து, பிச்சிவாக்கம் கிராமத்திற்கு செல்லும், 3 கி. மீ. , துார சாலை உள்ளது. இச்சாலையில், நான்கு இடங்களில், அபாயகரமான வளைவுகள் உள்ளன.
இந்த சாலை வளைவுகளில், வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில், எச்சரிக்கை பலகை இல்லை. மேலும், சாலையின் இருபுறமும் தடுப்பு கம்பிகளும் இல்லை.
குறிப்பாக, சாலை வளைவுகளின் அருகே, தார் சாலை சேதம் அடைந்திருப்பதால், வாகன ஓட்டிகள் பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளது. சமீபத்தில், இரண்டு வாகன ஓட்டிகள் அபாயகரமான வளைவுகளில் நிலை தடுமாறி விழுந்து காயம் ஏற்பட்டு உள்ளது.
எனவே, ஒண்டிக்குடிசை- - பிச்சிவாக்கம் சாலை இடையே, அபாயகரமான வளைவுகளில் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.