திருநங்கையருக்கு வீடுகள் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

463பார்த்தது
திருநங்கையருக்கு வீடுகள் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
செய்யூர் அருகே கொடூர் ஊராட்சிக்குட்பட்ட ஆட்சிவிளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில், 50க்கும் மேற்பட்ட திருநங்கையர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.


வீட்டுமனை மற்றும் வீடுகள் இல்லாததால், அவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

அதனால், வீடு இல்லாத திருநங்கையருக்கு, அரசு சார்பாக வீடு கட்டித்தர முடிவு செய்யப்பட்டு, ஆட்சிவிளாகம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பு பகுதி அருகே வீடுகட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

அரசு வீடு வழங்கும் திட்டம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன், 50 திருநங்கையருக்கும், தலா 4. 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி நடந்தது.

தொடர்ந்து, கட்டுமானப்பணிகள் துவங்கப்பட்டு, இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

திருநங்கையருக்கு கட்டப்படும் தொகுப்பு வீடுகளின் திறப்பு விழா, 27ம் தேதி தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தலைமையில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நேற்று செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் நேரில் ஆய்வு செய்து, அதன் கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதோடு, அதே பகுதியில் நடந்து வரும், 33 இருளர்களுக்கான வீடுகள் கட்டுமானப் பணியையும் பார்வையிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி