1, 651-பேர் மட்டும் வீட்டிலிருந்தே ஓட்டளிக்க விருப்பம்

1070பார்த்தது
1, 651-பேர் மட்டும் வீட்டிலிருந்தே ஓட்டளிக்க விருப்பம்
லோக்சபா தேர்தலில், 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வீட்டிலிருந்தே ஓட்டளிக்க ஏதுவாக, 12டி விண்ணப்பம் வீடுகளுக்கே சென்று தேர்தல் அதிகாரிகள் வழங்கினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர் 12 ஆயிரத்து, 35 வாக்காளர்களும், 8, 250 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர்.

இவர்களுக்கு, 12டி விண்ணப்பங்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், 85 வயதுக்கு மேற்பட்டோரில், 1, 039 பேரும், 612 மாற்றுத்திறனாளிகள் என, 1, 651 பேர் மட்டுமே, வீட்டிலிருந்து ஓட்டளிக்க முடிவு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வீடுகளுக்கே சென்று ஓட்டு பெற ஏதுவாக, 14 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கு, 12 மற்றும் 12ஏ படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் பணியாளர்கள் தபால் ஓட்டு செலுத்த வசதி மையம் ஏற்படுத்த உள்ளன.

தேர்தல் பணியாளர்களுக்காக மேற்கொள்ளப்படும் வசதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.