மறைமலைநகர் அருகே வாகனங்கள் மீது மோதிய ஆம்னி பேருந்து

53பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிக்னலில் நின்று கொண்டிருந்த இரண்டு கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது தேனியில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் சென்ற தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவர் மற்றும் காரில் பயணம் செய்த மூன்று பேர் என ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர் பின்பு அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்பு விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தினர் பின்பு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் தேனியில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் வரை ஆம்னி பேருந்து செல்வதாகவும் அதனை ஓட்டுனர் முகமது என்பவர் இயக்கி வந்தார் என்பதும் தூக்க கலக்கத்தினால் சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது இடித்து விபத்தை ஏற்படுத்தினார் என்பதும் தெரியவந்தது.

பின்பு அடிபட்ட வாகனங்களை அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்து நெசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி