ஓ. எம். ஆர். , வடிகால் சேம்பர்களில் துார்வாரும் பணிகள் துரிதம்

269பார்த்தது
ஓ. எம். ஆர். , வடிகால் சேம்பர்களில் துார்வாரும் பணிகள் துரிதம்
மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை உள்ள, 200 அடி அகல ஓ. எம். ஆர். , 21 கி. மீ. , துாரம் கொண்டது. சாலை இரு பகுதியிலும், 20 அடி அகலத்தில் அணுகு சாலை உள்ளது. இதில், 4 அடி அகலம், 4 ஆழத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளன. அடைப்பு எடுக்கும் வகையில், 15 மீட்டர் இடைவெளியில் ஆயிரம் இடங்களில் சேம்பர் அமைக்கப்பட்டுள்ளது. இதோடு, சாலையின் குறுக்கே 18 இடங்களில், 8 அகலம் 5 அடி ஆழத்தில் நீர்வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

மழைநீர் பகிங்ஹாம் கால்வாய் மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சேரும் வகையில் ஆங்காங்கே, நீர் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சில பகுதியில் மாநகராட்சியில் உள்ள வடிகால்களில் சேர்ந்து அங்கிருந்து பகிங்ஹாம் கால்வாயை அடைகிறது.

ஓ. எம். ஆர். , வடிகாலில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டிருந்தது.

மெட்ரோ ரயில் பணிக்காக சில இடங்களில் பள்ளம் எடுத்ததிலும் அடைப்பு ஏற்பட்டது. இதனால், பருவ மழையின் போது மழை நீர் செல்வது தடைபட்டு, குடியிருப்புகளில் பாதிப்பு ஏற்படும் சூழல் இருந்தது.

இதனால், அடைப்பு அதிகமாக உள்ள 'சேம்பர்'களில் தூர்வாரும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரயில் பணியால் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதன் வாயிலாக, பருவமழையின் போது ஓ. எம். ஆரில் மழைநீர் தேங்குவது தடுக்கப்படும் என, சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி