லிங்கமேடு பகுதி புதிய நியாய விலை கடை திறந்து வைத்த எம் எல் ஏ

77பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய மணமை ஊராட்சியில் இரண்டு நியாய விலை கடைகள் இயங்கி வருகிறது சிவராஜபுரம் லிங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் பகுதி நேர நியாய விலை கடை வேண்டும் என்ற கோரிக்கையை திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜியிடம் அப்பகுதி மக்கள் முன்வைத்தனர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருப்போரூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடையில் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

200 குடும்ப அட்டைகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே பகுதி நேர நியாய விலை கடையில் பொருட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அடுத்து திருப்போரூர் எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜியின் சீரீய முயற்சியால் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசி 180 குடும்ப அட்டைகள் உள்ள இப்பகுதியில் பகுதி நேர நியாய விலை கடையில் பொருட்கள் வழங்கலாம் என்ற ஆணையை பெற்று தந்தார்.

அதனை தொடர்ந்து நியாய விலை கடையில் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி திருக்கழுக்குன்றம் சேர்மேன் ஆர் டி அரசு முன்னாள் எம்எல்ஏ வீ தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுடன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து ரேஷன் பொருட்களை அப்பகுதி மக்களுக்கு வழங்கினர்.

தொடர்புடைய செய்தி