மாமண்டூரில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மாமண்டூரில் தேசிய நெடுஞ்சாலை அருகாமையில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன், ஒன்றிக்குழு துணைத் தலைவர் குமரவேல் அப்பாதுரை, ஒன்றிய செயலாளர்கள் வையாவூர் வி. ஜி. குமரன், முதுகரை கார்த்திகேயன், இவர்கள் கலந்து கொண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் அம்மா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து மௌன அஞ்சலி செய்தனர் கலந்து கொண்ட அனைத்து பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.