மவுரியர் கால நாணயங்கள் பாலாற்றில் கண்டெடுப்பு.

50பார்த்தது
மவுரியர் கால நாணயங்கள் பாலாற்றில் கண்டெடுப்பு.
செங்கல்பட்டு பாலாற்றில், மவுரிய வம்சம் மற்றும் சென்னை மாகாணமாக இருந்தபோது பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

செங்கல்பட்டு அருகில், பாலாற்றில் கள ஆய்வில் ஈடுபட்டுள்ள வரலாற்று ஆய்வாளர்கள் சங்க பொதுச்செயலர் மதுரைவீரன் கூறியதாவது:

செங்கல்பட்டு அருகில் கடக்கும் பாலாற்றில் நடத்தும் கள ஆய்வில், ராஜராஜன் உள்ளிட்ட மன்னர் காலத்தில் வெளியிடப்பட்ட செப்பு, வெள்ளி நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.

தற்போது, மவுரிய வம்ச காலத்தைச் சேர்ந்த சதுர வடிவ வெள்ளி நாணயம் கிடைத்துள்ளது. அதன் முன்புறம் கடோசியஷ், சூரியன், மூன்று அம்புகள், பின்புறம் மலைமுகடு ஆகிய சின்னங்கள் உள்ளன. இதன் வாயிலாக, மவுரிய வணிகர்கள் இங்கு வந்ததை அறிய முடிகிறது.

சென்னை மாகாண நிர்வாக காலத்தில் வெளியிடப்பட்ட வட்ட வடிவ வெள்ளி நாணயமும் கிடைத்துள்ளது. முன்புறம் மகாவிஷ்ணு, பின்புறம் பிறை ஆகிய சின்னங்கள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி