படூர் ஊராட்சியில் பிரமாண்டமாக நடைபெற்ற நலத்திட்ட உதவிகள்

79பார்த்தது
படூர் ஊராட்சியில் பிரமாண்டமாக நடைபெற்ற நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் படூர் ஊராட்சி மன்ற தலைவி தாரா சுதாகர் ஏற்பாட்டில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் 72வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, படூர் ரவுண்டானா அருகில் நேற்று (மார்ச். 14 வெள்ளிக்கிழமை) இரவு நடைபெற்றது. 

இதில் தமிழக அமைச்சர் தா. மோ. அன்பரசன், திராவிட பேச்சாளர் நாஞ்சில் சம்பத், காஞ்சிபுரம் எம்பி செல்வம், திருப்போரூர் ஒன்றிய சேர்மன் எல். இதயவர்மன், திமுக நிர்வாகிகள் தசரதன், ஏகாம்பரம், எக்ஸ்பிரஸ் எல்லப்பன், கே. ஏ. எஸ். சுதாகர், மயில்வாகனன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளாக தையல் மெஷின், அயர்ன் பாக்ஸ், எவர்சில்வர் குடம், ஸ்கூல் பேக், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. 

மேலும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள், மகளிரணியினர், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி