மாநில ஹாக்கி போட்டி காஞ்சி அணி வெற்றி

63பார்த்தது
மாநில ஹாக்கி போட்டி காஞ்சி அணி வெற்றி
காஞ்சிபுரம் ஹாக்கி கிளப் சார்பில், மாநில அளவிலான இரண்டாம் ஆண்டு ஆடவர் ஹாக்கி போட்டி, மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. காஞ்சிபுரம் டென்னிஸ் விளையாட்டு வீரரும், தொழிலதிபருமான பாரூக் போட்டியை துவக்கினார்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, சென்னை, தர்மபுரி உட்பட பல மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன.

'நாக் அவுட்' முறையில் நடந்த இப்போட்டியில், ஒவ்வொரு அணிக்கும் 30 நிமிடம் ஒதுக்கப்பட்டு, அதில் ஏழு பேர் உடைய குழுவினர், ஒவ்வொரு அணி சார்பிலும் விளையாடினர்.

காஞ்சி ஹாக்கி கிளப் அணி முதல் பரிசும், சென்னை மவுன்ட் டாலர்ஸ் ஹாக்கி கிளப் அணி இரண்டாவது பரிசும், தர்மபுரி பாலக்கோடு ஹாக்கி கிளப் அணி மூன்றாம் பரிசும் வென்றன.

மேலும், ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு சிறந்த விளையாட்டு வீரரை தேர்வு செய்து, அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி