செங்கல்பட்டில் குற்றவாளியை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு

51பார்த்தது
சென்னை அருகே அரசு சேவை இல்லத்தில் 13-வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு அளித்த விவகாரம் - குற்றவாளியை 15-நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு

சென்னை குரோம்பேட்டை அடுத்த சிட்லப்பாக்கம் அரசு சேவை இல்லத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி சேர்ந்து 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை எழுந்து வரும் போது அடையாளம் தெரியாத நபர் முகத்தில் கை வைத்து அழுத்தி மயக்கமடைய செய்து பாலியல் வன்புணர்வு செய்த போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சேவை இல்ல காவலாளி மேத்யூவை போக்ஸோ வழக்கில் கைது செய்தனர். தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது விசாரணை செய்த நீதிபதியிடம் குற்றத்தை தான் செய்யவில்லை எனவும், தன் மீது போடப்பட்ட வழக்கு குறித்து காவலர்கள் தனக்கு தெரிவிக்கவில்லை என மேத்யூ கூறினார். தொடர்ந்து மேத்யூவை வரும் ஜூன் 23 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி