தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் இணைந்து பொங்கல் பண்டிகையையொட்டி 3 நாட்கள் நடத்தும் 10வது ஆண்டு சர்வதேச பலூன் திருவிழா இன்று (10. 01. 25(10.01.25 வெள்ளிக்கிழமை) காலை செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அடுத்த திருவிடந்தை பகுதியில் துவக்கி வைக்கப்பட்டது.ஆண்டுதோறும்வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடத்தப்படும் இந்த பலூன் திருவிழாவில் பிரான்ஸ், ஆஸ்திரியா, பிரேசில், பெல்ஜியம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த ஏர் பலூன் பைலட்டுகள் கலந்து கொண்டு பல்வேறு வடிவங்கள் மற்றும் தனித்துவமான வண்ணங்களில் பலூன்கள் பறக்க விட உள்ளனர்.நிகழ்ச்சியில்உள்ளனர். நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், குறு சிறுகுறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ.தா.மோ. அன்பரசன் பங்கேற்று பலூன் திருவிழாவை துவக்கி வைத்தனர்.இதில்வைத்தனர். இதில் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அனாமிகா ரமேஷ், சப் கலெக்டர் நாராயண சர்மா, திருப்போரூர் ஒன்றிய சேர்மன் இதயவர்மன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.