காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படுவதால், தற்காலிகமாக கால்நடை மருத்துவமனை அருகே, மாநகராட்சியின் சுற்றுலா விடுதி கட்டடத்தில் மாநகராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது.
இதனால், பழைய கோப்புகள், நோட்டு, புத்தகங்கள், நெல்லுக்கார தெருவில் உள்ள அண்ணா அரங்கத்தில் குப்பை போல் போட்டு வைத்துள்ளனர்.
இதில், தேசிய கொடியும் மூட்டை மூட்டையாக குப்பை போல் போட்டு, மாநகராட்சி ஊழியர்கள் அவமதிப்பு செய்துள்ளனர். பயன்படுத்தாத கொடியாக இருந்தாலும், அவற்றுக்கு மரியாதை செலுத்தி, உரிய பாதுகாப்போடு, பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.
ஆனால், குப்பை போல் தேசிய கொடியை போட்டு வைத்திருப்பது, மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.