கழிவுநீர் கால்வாய்க்கு தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தல்

54பார்த்தது
கழிவுநீர் கால்வாய்க்கு தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தல்
பெரிய காஞ்சிபுரம், சாத்தான்குட்டை தெரு வழியாக புத்தேரி தெரு, பிள்ளையார்பாளையம், சாலை தெரு உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இச்சாலையில், சந்தியப்பன் நகர் இணையும் இடத்தில், கால்வாய் மூடாமலும், தடுப்புச்சுவர் அமைக்கப்படாமலும் உள்ளது.

இதனால், சந்தியப்பன் நகருக்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர், வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது, சாலையோர கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

இப்பகுதியில் மேய்ச்சலுக்காக வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும், நாய், பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளும் கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்குவதாக அப்பகுதியினர் புகார் தெரவிக்கின்றனர்.

எனவே, சாத்தான்குட்டை தெருவில், சாலையோரம் உள்ள கால்வாயை மூட வேண்டும் அல்லது தற்காலிக ஏற்பாடாக தடுப்புச்சுவராவது அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி