மாமல்லபுரத்தில் நடைபெறும் இந்திய நாட்டிய திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கரகாட்ட கலைஞர்களுடன் நடனமாடி அசத்தல்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று துவங்கி வரும் ஜனவரி 20ஆம் தேதி வரை இந்திய நாட்டிய திருவிழா நடைபெறவுள்ளது. இதனை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை செயலாளர் சந்திர மோகன், சுற்றுலாத்துறை ஆணையர் ஷில்பா பிரபாகர் சதீஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில் , ஐந்து ரதம், வெண்ணை உருண்டை பாறை , அா்ச்சுனன் தபசு உள்ளிட்ட பல்லவா் கால புராதான சின்னங்கள் உள்ளன. யுனெஸ்கோவால் சா்வதேச சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டுள்ள புராதன சின்னங்களைக் காண ஆண்டு முழுவதும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் வருகை தருகின்றனா்.
தமிழ்நாட்டு கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரிய விழாக்கள் குறித்து தெரிந்துக்கொள்ள வெளிநாட்டு பயணிகள் ஆா்வம் காட்டி வரும் நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் சுற்றுலாத் துறை சார்பாக டிசம்பா் மற்றும் ஜனவரி மாதத்தில் இந்திய நாட்டிவிழாவை மாமல்லபுரத்தில் நடத்தி வருகிறது.