கேளம்பாக்கம் கோவளம் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு எதிரே குப்பை கொட்டுவதால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதி.
கால்நடைகளால் அதிகரித்து வரும் சாலை விபத்துகள்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் கோவளம் பிரதான சாலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு எதிரே சாலையின் ஓரத்திலே குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
இந்த தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் இங்கு குப்பை கொட்டுவதால் துர்நாற்றம் அதிகமாக வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் குடியிருப்பு வாசிகள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
அப்படி வெளியே வர வேண்டுமென்றால் முக கவசம் அணிந்து கொண்டும் துணியால் மூக்கை மூடி கொண்டு வர வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில் துர்நாற்றமானது அதிக அளவில் வீசுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அதேபோல் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
அதிக அளவிலான கால்நடைகள் குப்பைகளில் உள்ள கழிவுகளை உட்கொல்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும். குப்பை கழிவுகள் சாலையோரத்தில் போடப் படுவதால் கால்நடைகளால் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.