தெருவிளக்குகள் பராமரிப்பு தனியாருக்கு கால நீட்டிப்பு

85பார்த்தது
தெருவிளக்குகள் பராமரிப்பு தனியாருக்கு கால நீட்டிப்பு
செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், தெருவிளக்குகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்திற்கு காலநீட்டிப்பு வழங்கி, நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு நகராட்சியில், 7வது வார்டு முதல் 33 வார்டுகளுக்கு, தெருவிளக்குகளை பராமரிக்கும் பணியை, தனியார் நிறுவனத்திற்கு நகரராட்சி நிர்வாகம் வழங்கியது. அதன்பின், தெரு விளக்குகள் பராமரிக்கும் பணியில், தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இப்பராமரிப்பு பணியை, கடந்த ஜூன் 7ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இப்பணியை மேற்கொள்ள, 11. 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளை செயல்படுத்த, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி