மாமல்லபுரம் பலூன் திருவிழாவில் ஏமாற்றம்

75பார்த்தது
சென்னை மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில் நடைபெற்று வரும் பலூன் விடும் திருவிழாவிற்கு வந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுற்றுலா பயணிகள், மற்றும் பொதுமக்கள் 4 மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மாலை 3 மணி முதல் சர்வதேச பலூன் திருவிழாவை காண பொதுமக்கள் வருகை தந்த நிலையில் கடற்கரை ஒட்டி பலூன் விடும் திருவிழா நடைபெறுவதால் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால் பலூன்கள் மேலே பறக்க முடியாமல் தோல்வியடைந்தது. 

இதனால் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக வந்தவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். காலையில் அமைச்சர்கள் துவங்கி வைத்த திருவிழா மாலையில் காற்றின் வேகத்தில் பலூன் பறக்க விடாமல் தோல்வியடைந்ததை அடுத்து பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

மேலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து வெகுதொலைவிலிருந்து பொதுமக்கள் வருகை தந்திருப்பதால் அவர்கள் இசை நிகழ்ச்சி மட்டுமே கண்டு கழித்து செல்கின்றனர். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா முதல் நாளிலே தோல்வியடைந்துள்ள நிலையில் மீதமுள்ள இரண்டு நாட்கள் எப்படி நடைபெறும் என பொதுமக்களிடையே பெரும் கேள்வி எழுந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி