திருப்போரூர் ஒன்றியம், அனுமந்தபுரம் ஊராட்சியில், பிடாரி பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த கோவிலுக்கு, செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி, அமாவாசை உள்ளிட்ட தினங்களில், சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் அவற்றை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.
அவர்கள், கோவில் எதிரே பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். ஆனால், முறையாக குடிநீர் வசதி செய்யப்படவில்லை.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
கடந்த 2013ம் ஆண்டு, ஊராட்சி ஒன்றிய நிதியில், 'மினி டேங்க்' அமைகப்பட்டு, கோவில் அருகே உள்ள கிணற்றில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் வசதி செய்யப்பட்டது.
அதை முறையாக பராமரிக்காததால் பயன்பாடின்றி வீணானது. இதனால், கோவிலுக்கு குடும்பத்துடன் வரும் பக்தர்கள், விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை உள்ளது.
எனவே, கோவில் வளாகம் அருகே, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, கோவில் நிர்வாகம் அல்லது ஊராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.