செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் வடநெம்மேலி பகுதியில் நடைபெறும் சர்வதேச பீச் வாலிபால் போட்டியை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (21.11.25 வியாழக்கிழமை) மாலை 6.00 மணிக்கு துவக்கி வைத்தார்.
வடநெம்மேலி இண்டர் கான்டினென்ட்டல் ஹோட்டல் வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா, காஞ்சிபுரம் எம்பி செல்வம், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி, ஒன்றிய சேர்மன் இதயவர்மன், வேளாண்மை ஆத்மா குழு தலைவர் பையனூர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.